Home இந்தியா அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்

அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்

பிரணா‌ப் முகர்ஜியின் மறைவை அடுத்து நாடு முழுவதும் உள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்ப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணா‌ப் முகர்ஜி காலமானார். இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரணா‌ப் முகர்ஜியின் மறைவை அடுத்து நேற்று ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும், பிரணாப் முகர்ஜியின் மறைவை ஒட்டி நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதனையடுத்து நாடு முழுவதும் உள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version