Home சினிமா மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் திடீர் மாற்றம்

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் திடீர் மாற்றம்

மாநகரம், கைதி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல் முதலில் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Previous articleமாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
Next articleSelepas Menteri pergi Turki, harga sawit naik melonjak

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version