Home உலகம் நினைவுகளை மீட்டெடுக்கக்கூடிய மூளை கட்டுப்பாட்டு சிப் அறிமுகம்

நினைவுகளை மீட்டெடுக்கக்கூடிய மூளை கட்டுப்பாட்டு சிப் அறிமுகம்

எலோன் மஸ்க் எலக்ட்ரிக் கார் என்ற கருத்தை கண்டுபிடித்த இந்த பெரிய தொழிலதிபர் தற்போது மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்..!

உங்கள் பழைய அல்லது மறந்த நினைவுகளை நினைவுபடுத்த முடியுமா? ஒரு சிப் உதவியுடன், உங்கள் மூளையை கட்டுப்படுத்தலாம். பல நோய்களை குணப்படுத்த முடியுமா? ஒரு சிப் உங்கள் மூளையை இயக்க முடியுமா? இதெல்லாம் கேட்க விசித்திரமாக இருக்கலாம். ஆனால், அது சாத்தியமாகும். இது ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படம் அல்ல. எலோன் மஸ்கா (Elon Mus) எதிர்காலத்தில் இதை உண்மையாக்க முயற்சிக்கிறார். எலோன் மஸ்க் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர். எலக்ட்ரிக் கார் என்ற கருத்தை கண்டுபிடித்த இந்த பெரிய தொழிலதிபர் தற்போது மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய உள்வைப்புகளை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில் மனிதகுலத்தை எதிர்காலத்தில் சூப்பர் புத்திசாலித்தனமான கணினிகளுடன் இன்னும் அதிக அளவில் நிலைநிறுத்தும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான நியூரலிங்க் (Neuralink) என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக மனித மூளையைப் படிக்கும் சிப்களை உருவாக்கி வருகிறது. அந்நிறுவனம் தற்போது பன்றியின் மூளைக்கு ஒரு சிப் பொருத்துதல் பரிசோதனையை செய்து வருகிறது. நாணய அளவிலான சிப் வராஹாக்களின் மூளையில் இணைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், இது மனித மூளைக்கும் பயன்படுத்தப்படலாம். மண்டை ஓடு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இதை மனிதர்களின் மூளைக்குள் பொறுத்தலாம்.

மனிதனில் மூளையில் சிப் வைக்கும் முயற்சியின் முன்னோட்ட நடவடிக்கையின் முதற்கட்டமாக பன்றியின் மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. பன்றியின் மூளையில் இரண்டு மாதங்களாக 8 மிமீ அளவு கொண்ட கணினி சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப் பொருத்தப்பட்ட பன்றிக்கு இரண்டு மாதங்களாக எந்தவித உடல் நலக் குறைவும் ஏற்படவில்லை. சிப் பொருத்தப்பட்ட நாளில் இருந்தே பன்றி நலமுடன் இருப்பது கண்டறியபட்டது.

பன்றியின் மூளையில் பொருத்தப்பட்ட சிப் மூலம் பன்றியின் நடவடிக்கையில் உருவாகும் சிக்னல்களை கம்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. நியூரோலிங்க் பதிவு செய்யப்பட்ட சிக்னல்களையும், பன்றியையும் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கம்பியூட்டர் சிப் பொருத்தம் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களும் கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை அடுத்த கட்டமல்ல பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் என கூறப்படுகிறது.

மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று, அதிநவீன ரோப்போகள் உதவியுடன், மனிதர்களின் தலைமுடியைவிட சிறய கம்யூட்டர் சிப்கள் மனிதன் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்தும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

Previous articleஜப்பான் – அமெரிக்க உறவில் மாற்றமில்லை
Next articleரூ.300 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version