Home இந்தியா அப்பா இடத்தை நிரப்ப போகும் விஜய் வசந்த்

அப்பா இடத்தை நிரப்ப போகும் விஜய் வசந்த்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடல்நலக் குறைவால் கடந்த 28ம் தேதி மாலை காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பேரிழப்பாகவே கருதப்படுகிறது. வசந்தகுமார் மாற்றுக்கட்சியினரை கூட மதித்துப் போற்றக்கூடிய ஒருவராகத் திகழ்ந்தவர்.

இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மக்கள் உள்ளனர். இதில் இளைய மகன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வசந்தன்கோ நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வருகிறார். மூத்த மகன் விஜய் வசந்த் திரைப்படங்களில் நடித்து வருவதோடு, நிறுவன கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.

தற்போது வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அரசியலுக்கு கொண்டு வர வேண்டுமென, அவரது வசந்தகுமாரின் நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விஜய் வசந்துக்கு காங்கிரஸ் சீட்டு தர வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்பி மறைவை அடுத்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு குறித்து விஜய் வசந்த் கூறியதாவது, அரசியல் விருப்பம் இருக்கிறது. ஆனால் தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. காங்கிரஸ் உறுப்பினராக நான் கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version