Home உலகம் இலங்கை கடற்கரையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல்

இலங்கை கடற்கரையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல்

இலங்கை கடற்கரையில் பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அவை முற்றிலும் கட்டுக்குள் இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

பனாமா நாட்டின் நியூ டைமண்ட் என்ற கப்பலானது 2,70,000 டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தது. இந்த கப்பலில் மாலுமிகள், பொறியாளர்கள் உள்பட 23 பேர் இருந்தனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்கரை அருகே சங்கமன்கந்தை கிழக்கு கடலோரத்தில் அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை அணைக்க ரஷ்யாவின் போர்க் கப்பல் களத்தில் உள்ளது.

தீயை அணைக்க இலங்கையும் தன் பங்குக்கு போராடி வரும் நிலையில் இந்தியாவுக்கு தனது போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. கப்பலில் தீயை அணைக்கும் பணியில் இந்தியாவின் சவுரியா, சரங்க, சமுத்ரா ஆகிய 3 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த கப்பலில் பயணம் செய்த 23 பேரில் ஒருவர் மட்டும் உயிரிழந்துவிட்டார். மற்ற 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கச்சா எண்ணெய் கடல் முழுவதும் பரவி வருவதால் அவை சுற்றுப்புறச்சூழலுக்கும் கடல் வாழ் உயிரினத்திற்கும் கேடு விளைவிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதை தடுக்க இந்தியா தீவிரமாக முயற்சித்து வந்தது. நீர் மற்றும் நுரையை பீய்ச்சி அடித்து தீ கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய கடலோர படை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இலங்கை கடற்கரையிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள நியூ டைமண்ட் கப்பலில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் இலங்கையின் கப்பல்களும் போர் விமானங்களும் தீயை அணைக்க போராடி வருகின்றன. தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தீ குறைந்து தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி எண்ணெய் கப்பலில் கலக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

3 படகுகள் மூலம் ஆழ் கடலுக்கு கப்பல் இழுத்து செல்லப்பட்டுள்ளது. கப்பல் கடலில் மூழ்குவதை தடுக்கவும் எண்ணெய் கடலில் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மொரீஷியஸ் கடலோரத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றிலிருந்து எண்ணெய் லீக்கானது குறிப்பிடத்தக்கது.

Previous article‘சிங்கம்’ பட போலீஸ் போல நடக்க வேண்டாம்
Next articleஆன்லைன் வகுப்புக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version