Home Hot News கள்ள மதுபானம் பறிப்பு

கள்ள மதுபானம் பறிப்பு

இங்குள்ள தாமான் வவாசான் குளுவாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின்போது,    ஒரு  மில்லியன் வெள்ளி  மதிப்புள்ள கள்ள மதுபானங்களை  சிறப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.

அக்குழுவின் உயர் அதிகாரி சுப்ரிண்டெண்டண்ட் டிமின் அவாங் கூறுகையில், பிற்பகல் 1.50 சோதனையின்போது  வளாகத்தில் ஓர் ஊழியர் என்று  நம்பப்படும் 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவற்றைக் கப்பலில் அனுப்பத் தயாராக உள்ள சுமார் 9,000 பாட்டில்கள் அடங்கிய மொத்தம் 321 பெட்டிகள் வளாகத்தில் காணப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த கள்ள மதுபான பதப்படுத்தும் தொழிற்சாலை கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இயங்கி வருவதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இவை ஜொகூர்,  மேலகாவைச் சுற்றி விநியோகிப்பதற்கானவை என்று நம்பப்படுகிறது. வெளிநாட்டினரை மட்டுமே மையமாகக் கொண்டு இவை தயாரிக்கபடுவதாக டிமின் அவாங்  ஓர் அறிக்கையில்  தெரிவித்தார்.

வரி ஏய்ப்புக்காக சுங்கச் சட்டம் 1967 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version