Home மலேசியா கூட்டுறவுக்கழகங்களுக்கு உதவித்தொகை

கூட்டுறவுக்கழகங்களுக்கு உதவித்தொகை

மலேசியாவின் கூட்டுறவு ஆணையத்திடம் இருந்து மூன்று கூட்டுறவு நிறுவனங்களுக்கு இன்று RM3 மில்லியன் நிதி உதவி கிடைத்தது.

கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கூட்டுறவு மறுவாழ்வுக்கான உதவியாக இது அமையும்.

அவை கோபராசி சாவா செம்பாடான் தஞ்சோங் காராங் பெர்ஹாட், கோபராசி ஜபாதான் பெஞ்சாரா மலேசியா,  கோபராசி பெர்மோடாலான் ஃபெல்டா மலேசியா பெர்ஹாட் ஆகிய மூன்றும்  தலா 1 மில்லியன் டாலர் உதவி பெற்றன.

இங்குள்ள மலாகாட் மாலின் திறப்பு விழாவில் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜஃபார்  இந்த பங்களிப்புகளை வழங்கினார்.

கோவிட் -19 தொற்றுநோயால் தற்போது குறைந்த விலையில் இருக்கும் பங்குகளின் உரிமையை அதிகரிக்க நிதித்திறன் கொண்ட கூட்டுறவு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று வான் ஜுனைடி தனது உரையில் கூறினார்.

Previous articleகாலாவதியான பொருட்கள் ரேஷன் கடையில் விற்பனை
Next articlePerincian Sidang Mahkamah Kes Pembunuhan Birch Ke Atas Seputum Pada Mac 1876

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version