Home உலகம் இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது ரஷ்ய தடுப்பூசி

இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது ரஷ்ய தடுப்பூசி

‘ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-5′ இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என, ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ‘கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு நாங்கள் தான்’ என, உலக நாடுகளுக்கு ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

‘ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3ம் கட்டத்துக்குச் செல்லவில்லை’ எனக் கூறப்பட்டது.இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தங்களது தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா.

மேலும் தங்கள் தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா அறிவித்தது.இந்நிலையில்,​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள், ‘ஸ்புட்னிக்-5 தடுப்பூசிக்கு சுகாதாரத் துறை ஒப்புதழ் வழங்கவுள்ளது. இந்த வாரம் அதாவது வரும் 13ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும்’ என, தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version