Home மலேசியா சிறந்த உழைப்பாளியின் மரணம் பேரிழப்பு

சிறந்த உழைப்பாளியின் மரணம் பேரிழப்பு

தனது தனிச் செயலாளர் மொகமட் ஷம்சுதீன் டாமின் மரணம் நாட்டில் முஸ்லிம், அரசு சாரா நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) பெரும் இழப்பு என்று துணை தகவல் தொடர்பு பன்முனைத்தகவல் அமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் அபிடின் விவரித்தார்.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் (இக்கியம்) செயலாளர் பதவியில் இருந்த 56 வயதான மொகமட் சம்சுதீன், தஃபிஸ் பள்ளிகள், ஹலால் விஷயங்கள், பேறு குறைந்தவர்கள்,  முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்தார் என்று ஜாஹிடி கூறினார்.

இங்குள்ள பிரிவு 30இல் உள்ள முகமது ஷம்சுதீனின் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்குச் சென்று சந்தித்த பின்னர் ஜாஹிடி செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜாஹிடி, மொகமட் சம்சுதீன் ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய  கடின உழைப்பாளியாவார். அவர் சமூகத்திற்கு நல்ல சேவை வழங்குவதில் ஆர்வமாக இருந்தவர். அவரை ஒரு தனியார் செயலாளராகக் கொண்டிருப்பது அதிர்ஷ்டம் என்று கூறினார்.

இங்கிருந்து 176 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெண்டாங்கின் ஜண்டா பாய்க்கில் ஓர் அறையில் திடீரென மாரடைப்பால் சரிந்ததாக நம்பப்பட்ட மொகமட் சம்சுதீன் செப்டம்பர் 5 ஆம் தேதி உயிர்துறந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version