Home உலகம் தன்னார்வலருக்கு உடல்நலம் பாதிப்பு

தன்னார்வலருக்கு உடல்நலம் பாதிப்பு

தன்னார்வலர் ஒருவர் உடலில் செலுத்தி ஆய்வு செய்யும் போது அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு கரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகளை ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் இரு கட்டங்களை இத்தடுப்பூசி ஆய்வுகள் வெற்றிகரமாக கடந்துவிட்டன. அதனையடுத்து உலக அளவில் துறைசார் வல்லுநர்களால் இத்தடுப்பூசி ஆய்வுகள் உற்றுக் கவனிக்கப்பட்டன. விரைவில் பயன்பாட்டிற்கு வரக் கூடிய தடுப்பூசிகளுக்கான பட்டியலில் இந்தத் தடுப்பூசியும் முக்கிய இடம் வகித்தது. இந்நிலையில் தடுப்பு மருந்தை தன்னார்வலர் ஒருவருக்கு செலுத்தி சோதனை செய்யும் போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து இந்த ஆய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மருந்து செலுத்தப்பட்டவருக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தான முழு விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version