Home இந்தியா தமிழகத்தில் ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு தடையில்லை

தமிழகத்தில் ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு தடையில்லை

‘ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, 14 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டு, முடித்து வைத்தது.இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வருவதால், உரிய விதிமுறைகளை வகுக்காமல், ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரித்தது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை, நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.இந்த வழக்கை இன்று முடித்து வைத்த நீதிபதிகள்,

மத்திய மாநில அரசுகள் உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்

ஆன்லைன் வகுப்புக்கு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் பெற்றோர் – ஆசிரியர் கலந்துரையாடல் இருக்க வேண்டும்

மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்

விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Previous articleவாயில் காயத்துடன் சுற்றிய யானை மரணம்
Next articleMusa, 32 ADUN kecewa rayuan ditolak

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version