Home உலகம் சீனாவில் மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி

சீனாவில் மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு இது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த மருத்துவ பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 100 பேருக்கு மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்து அதன் விளைவுகள் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்
Next articlePenyanyi, Sandra Dianne menghembuskan nafas terakhir

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version