Home உலகம் தெற்காசியாவில் பயங்கரவாதத்தை தடுக்க பிடன் தேர்தல் வாக்குறுதி

தெற்காசியாவில் பயங்கரவாதத்தை தடுக்க பிடன் தேர்தல் வாக்குறுதி

‘தெற்காசியாவில் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்’ என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பிரசாரத்தில் உறுதியளிக்கப்பட்டது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்கிறது.

இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஹிந்து அமெரிக்கர் அரசியல் நடவடிக்கை குழு சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஜோ பிடனின் பிரசார குழு அளித்த பதில்களில் கூறியதாவது: இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்பு, இயற்கையாகவே அமைந்துள்ளது. இரு நாடுகளும், பல விஷயங்களில், ஒருமித்த கருத்துக்களை கொண்டுள்ளன. ஜோ பிடன் தலைமையில் ஆட்சி அமைந்தால், இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.தெற்காசியாவில் பயங்கரவாதத்தை சிறிதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில், இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறுபவர்களின் நாடாக அமெரிக்கா உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு கோடிக்கும் அதிகமான அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவோம். இதில், இந்தியர்கள், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.தீபாவளி விழாஹிந்து பண்டிகைகள், அரசு விழாக்களாக கொண்டாடப்படும். ஒபாமா அதிபராக இருந்த போது, வெள்ளை மாளிகையில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. ஜோ பிடன் அதிபரானால், வெள்ளை மாளிகையில், தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி உட்பட, பல ஹிந்து பண்டிகைகள் கொண்டாடப்படும்.

இவ்வாறு, ஜோ பிடன் பிரசார குழு பதில் அளித்தது. ‘ராணுவ அத்துமீறலை சீனா நிறுத்த வேண்டும்’, ‘சீனா, லடாக் எல்லையில், ராணுவ அத்துமீறலை உடனடியாக நிறுத்திவிட்டு, பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.இது பற்றி அவர் கூறியதாவது: இந்தியா – சீனா இடையே, லடாக் எல்லையில் பதற்றம் நிலவுவது கவலையளிக்கிறது. இது, இரு நாடுகளுக்குமே நல்லதல்ல. எல்லையில் பதற்றத்தை குறைக்க, சீனா, ராணுவ அத்துமீறலை நிறுத்த வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு காண, இந்தியாவுடன் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version