Home இந்தியா கழிவுநீர் சுத்தம் செய்கையில் 288 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கழிவுநீர் சுத்தம் செய்கையில் 288 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியின் போது தூய்மை பணியாளர்கள் 288 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகம் கண்டுபிடித்துக்கொண்டு இருந்தாலும், கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர் உயிரிழப்பு என்ற செய்தி அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பங்கள் பல இருந்தாலும் சரியான கழிவுநீர் பாதை கட்டமைப்பு இல்லாததே இந்த பிரச்னைக்கு பிரதான காரணமாக உள்ளது.

இந்நிலையில் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு 2018-19ல் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நடைபெற்றது.

மாநில அரசுகள் கொடுத்த தரவுகளின் படி, கடந்த 3 ஆண்டுகளில் ஆகஸ்ட் 31 2020 வரை கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் 288 பேர் உயிரிழந்துள்ளனர். அதே தரவுகளின்படி, இந்திய அளவில் 51,835 பணியாளர்கள் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் உத்தர பிரதேசத்தில் மட்டுமே 24,932 பேர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version