Home சினிமா நடிகர் சங்க வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

நடிகர் சங்க வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் 2019 ஜூன் மாதம் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இத்தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்களான ஏழுமலை, பெஞ்சமின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, ”இப்பிரச்சினையை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். எனவே, நடிகர்சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா, அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் சுமுகமாக பேசி, செப்.24-ம் தேதி பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இதே அமர்வில் இந்த வழக்குநேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. நீதிமன்ற அறிவுரையைஏற்று சுமுகமாக செல்லவும் மறுத்துவிட்டனர். எனவே, இந்தவழக்கை மேற்கொண்டு விசாரிக்கப் போவதில்லை’ என்றுகருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version