Home இந்தியா விவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.4 கோடியில் படகு

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.4 கோடியில் படகு

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்துக்கு, ௪ கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட புதிய நவீன படகு நேற்று வந்தது.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர்பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பயணியர், 79 மீட்டர் துாரம் படகில் செல்கின்றனர். இதற்காக தமிழ்நாடு பூம்புகார் போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மார்ச் இறுதியில், ௪ கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய படகு வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இயக்கப்படாமல் படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவாவில் இருந்து நேற்று மேலும் ஒரு புதிய நவீன படகு வந்தது. இதில், 150 இருக்கைகளும், மேல்தளத்தில், 12 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன அறையும் உள்ளது. 27 மீ., நீளம், 7 மீ., அகலம் கொண்ட இந்த படகு, ௪ கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது பொறியாளர்கள் வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே ஒரு நபருக்கு சாதாரண கட்டணமாக, 50 ரூபாய், சிறப்பு கட்டணமாக, 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. புதிய படகுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. ஊரடங்கு முழு தளர்வுக்கு பின் படகு இயக்கப்படும்.

Previous articleபுதிதாக இன்று 82 பேருக்கு கோவிட்-19
Next articleசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்- டிரம்ப்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version