Home சினிமா சிம்பு, தனுஷ் பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்

சிம்பு, தனுஷ் பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருபவர்கள் சிம்பு மற்றும் தனுஷ். கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திருடா திருடி. இந்த படத்தை கிருஷ்ணகாந்த் என்பவர் தயாரித்திருந்தார். மேலும் இவர் தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தையும் சிம்பு நடித்த மன்மதன் படத்தையும் கிருஷ்ணகாந்த் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் திருடா திருடி மற்றும் மன்மதன் படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் மரணமடைந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version