Home மலேசியா பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் நீர் விநியோகம் பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் நீர் விநியோகம் பாதிப்பு

சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் மாவட்டத்தில் மொத்தம் 29 பகுதிகளில் நேற்று  இரவு 11 மணி முதல் திட்டமிடப்படாத நீர் வழங்கல் பாதிப்பு ஏற்பட்டது, பெர்சியாரான் மிம்பார், புக்கிட் ஜெலுத்தோங்கில் ஏற்பட்ட குழாய் பாதிப்பு  காரணமாக இத்தடை ஏற்பட்டது.

பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் (ஏர் சிலாங்கூர்) கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் எலினா பசேரி கூறுகையில், குழாயை சரிசெய்யும் பணிகள் நாளை அதிகாலை 5 மணிக்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காலை 8 மணிக்கு நீர் வழங்கல் முழுமையாக மீட்கப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பண்டார்  கின்ராரா 1, 2, 3, 4, 5 , 9; ஜாலான் பூச்சோங் பத்து 7 வரை ஜாலான் பூச்சோங் பத்து  13;  கம்போங் போஹோல்; ஜாலான் கெனாரி; பிஜேஎஸ் 1 முதல் பிஜேஎஸ் 11 வரை; கம்போங் லெம்பா கின்ராரா ,  புச்சோங் மெஸ்ரா ஆகிய பகுதிகளாகும்.

சிரிம் வாட்டாரப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன; தாமான் புக்கிட் கூச்சாய்; தாமான் கின்ராரா; பூச்சோங் இண்டா ; தாமான் பூச்சோங் பெர்மாய் , தாமான் பெரிண்டஸ்ட்ரியான் 7, என்று அவர்  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஆயர் சிலாங்கூர் பயன்பாடு www.airselangor.com என்ற வலைத்தளம் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலமும் அவ்வப்போது நீர் வழங்கல் குறித்த தகவல்கள் வழங்கப்படும் .

Previous articleஅனைவரும் பாதுகாப்பு அம்சத்தை பின்பற்றவும் – வீ கா சியோங்
Next articleமுதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version