Home உலகம் ஜெர்மனியின் ஒற்றுமை தினத்தின் பின்னணி வரலாறு

ஜெர்மனியின் ஒற்றுமை தினத்தின் பின்னணி வரலாறு

ஜெர்மனில் ஒற்றுமை தினம் அக்டோபர் 3ம் தேதி தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தின் பின்னணி வரலாறு மிகவும் சுவாரசியமானது. அவற்றிற்கு காரணம் இதோ, 1961ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியில் பொருளாதாரம் மிக கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்த ஒரு காலகட்டமாக இருந்தது.

அப்போது மக்கள் வேறு நாட்டிற்கும் குடியேறுவது வழக்கமாக கொண்டிருந்தனர். அதை தடுப்பதற்காக அந்நாட்டு சோவியத் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெர்லினில் 155 கிலோ மீட்டர் நீளத்துக்கு 12 அடி உயரத்தில் சுவர் எழுப்பியது. இந்த சுவர் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அவற்றின் மேல் மணல் மற்றும் கற்களால் மூடப்பட்டிருந்தது. காரணம் இந்த சுவரை தாண்டி செல்பவர்களில் கால்தடம் கண்டறிய பயன்படும் முறையாக பயன்படுத்தப்பட்டது. எவரேனும் இந்த சுவரை தாண்டி அந்தப் பக்கத்திற்கு சென்றால் அவர்கள் கண்டறியப்பட்டு, படுகொலையும் செய்யப்பட்டனர்.

இந்த சுவர் கட்டப்பட்டு, பிறகு ஜெர்மனியில் இருந்து மக்கள் வெளியேறுவது குறைக்கப்பட்டது. சோவியத் நாடு சிதறிய போது கிழக்கு ஜெர்மனி மக்கள் எழுச்சி கொண்டு எழுந்து பெர்லின் சுவர் தகர்த்தெறிய தொடங்கினர். 1989 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பெர்லின் சுவர் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் மூலமாக மேற்கு கிழக்கு ஜெர்மனி 1990ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் ஒரே நாடாக மாறியது.

எனவே அக்டோபர் 3ம் தேதி ஜெர்மனி ஒரே நாடாக மாறியதை தொடர்ந்து, அந்நாட்டு அரசு அந்த நாளை ‘ஜெர்மனியின் ஒற்றுமை’ தினமாக அறிவித்து பிரகடனப்படுத்தியது. ஐரோப்பிய ஒருங்கிணைப்பு தற்போது ஜெர்மனியில் நிலவும் அமைதி மற்றும் வளத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜெர்மன் நாடு மீண்டும் ஒன்றிணைய வலிமையான இதேவேளையில் அமைதியான போராட்டமே காரணமாக அமைந்தது.

இந்த வெற்றியை மகிழ்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3ம் தேதி ‘ஜெர்மனி ஒற்றுமை தினம்’ ஜெர்மனிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெர்மனியின் கூட்டாட்சி குடியரசு ஐரோப்பாவில் ஆழமாக தற்போது வேரூன்றி இருக்கிறது. ஜனநாயகம் மற்றும் சுதந்திரப் போக்கு ஆகியவை ஜேர்மனி வெளியுறவு கொள்கைக்கு வித்தாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version