Home மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் சிறப்பு வருகை

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் சிறப்பு வருகை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதனை அனைவரும் அறிவோம்.  அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானது.
அந்த வகையில் மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் 3ஆவது வார சனிக்கிழமை கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
அவர் ஆலயம் வந்திருந்த போது மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் முத்துசாமி  திருமேனி உள்ளிட்டவர்கள்  டத்தோ ஶ்ரீ சரவணனை சந்தித்து கோவிட்-19 காலகட்டத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகளை குறித்து விவரித்தனர். அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்த அமைச்சர் விரைவில் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதற்கிடையே கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில் கோவிட் காரணமான பக்தர்கள் பலர் அழைத்து பூஜைகள் நடக்குமா என்று கேட்கின்றனர். ஆலயத்த்தில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதே வேளை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மனித வளத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆலயத்திற்கு வருகை தந்தபோது அர்ச்சகர்கள் பற்றாக்குறை குறித்து விவரித்திருப்பதாகவும் கோவிட் பிரச்சனை குறைந்தவுடன் நிச்சயம் அர்ச்சகர்கள் விவகாரம் குறித்து உதவி புரிவதாக தெரிவித்திருக்கிறார் என்று  ஆலயத் தலைவர் தெரிவித்தார்.
Previous article99% நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை
Next articleஇன்று புதிதாக 293 பேருக்கு கோவிட்-19 தொற்று

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version