Home இந்தியா சைக்கிள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

சைக்கிள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

சைக்கிள் விற்பனை கடந்த 5 மாதங்களில் 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டூவீலர் தேவை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை மற்றும் உடலுக்கு நலம் போன்ற காரணங்களால் சைக்கிள்களுக்கு படு கிராக்கி ஏற்பட்டுள்ளது.  இதனால், கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்களில் நாடு முழுவதும் 41,80,945 சைக்கிள்கள் விற்பனை ஆகியுள்ளன என, அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சைக்கிள் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் கே.பி.தாக்குர் கூறுகையில், ‘‘சைக்கிள்களுக்கு தேவை.

இதற்கு முன்பு இந்த அளவுக்கு அதிகரித்ததே இல்லை. பலர் தங்களுக்கு பிடித்தமான சைக்கிள்களை வாங்க முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர்’’ என்றார். கடந்த மே மாதத்தில் 4,56,818 சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த ஜூன் மாதத்தில் 8,51,060 ஆகவும், செப்டம்பரில் 11,21,544 ஆகவும் அதிகரித்துள்ளது. 5 மாதங்களில் 41,80,945 சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன என சைக்கிள் உற்பத்தியாளர்கள் சங்க புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version