Home சினிமா ஆக்‌ஷனில் களமிறங்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால்

ஆக்‌ஷனில் களமிறங்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம் படங்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இப்படத்தை அடுத்து தற்போது சின்ட்ரெல்லா, டெடி, புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.

தற்போது சாக்‌ஷி அகர்வால் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்கும் இதில் அவருடன் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் சாக்‌ஷி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க இருப்பதாவும் கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை சாக்‌ஷி அகர்வால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Previous articlePenting jaga kebersihan, tarikan pelancong ke Sekinchan
Next articleநிபோங் திபால் சிறைச்சாலை கைதிக்கு கோவிட் தொற்று உறுதி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version