Home மலேசியா கடமையில் இருந்த போலீசாருக்கு இடைஞ்சல் விளைவித்த ஆடவர் கைது

கடமையில் இருந்த போலீசாருக்கு இடைஞ்சல் விளைவித்த ஆடவர் கைது

சிஎம்ஓசி காலகட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் மிகவும் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரிக்பீல்ட்ஸ் வட்டார போலீசார் உணவகங்களில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வேளையில் 25 வயது இந்திய ஆடவர் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அவரை கைது செய்து பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக ஏசிபி ஜைருல் நிஸாம் பின் முகமட் ஜைனுடின் @ ஹில்மி தெரிவித்தார்.

அந்நபரை செக்‌ஷன் 186 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதே வேளை இந்த சோதனை நடவடிக்கையின்போது 5 கடை உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது.

காரணம் அரசாங்கத்தின் எஸ்ஓபி கடைபிடிக்காத காரணத்தால் சம்மன் வழங்கப்பட்டது. சிஎம்ஓசி ஆரம்பித்து இந்த 4 நாட்களில் 134 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் பங்சார் வட்டாரத்தில் மட்டுமே 70 சம்மன்கள் வழங்கப்பட்டது என்று ஏசிபி கூறினார்.

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை நடவடிக்கையின் போது சுற்று வட்டாரத்திலுள்ள 7 காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 26 குழுக்களாக பிரிந்து சாலை தடுப்பு உள்ளிட்ட சோதனை ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அனைவரும் அரசாங்கத்தின் நடமாட்ட கட்டுபாட்டு ஆணையை கடைபிடிக்க வேண்டும் ஏசிபி ஜைருல் நிஸாம் பின் முகமட் ஜைனுடின் @ ஹில்மி என்று வேண்டுகோள் விடுத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version