Home இந்தியா நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள்!

நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள்!

வேலையில்லாததால் நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள், அமோகமாக விற்பனை நடைபெறுவதாக மகிழ்ச்சி.

அண்மை காலங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதால் கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து காணப்படுகின்றனர். அதிலும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணியில் காவிரி கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டாததால் விவசாயிகள் விவசாயப் பணிகளை நடத்த முடியாமல் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளை தேடி சென்றுள்ளனர். அதில் ஒன்றாக ஆற்றங்கரை குளக்கரை, வயல்வெளிகள் உலாவக்கூடிய நத்தைகளை பிடித்து அவற்றை விற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இரவு முதல் அதிகாலை வரையிலும் நத்தை பிடித்து வருகின்றனர். அதன்பின் கடைவீதி ஒயின்ஷாப் வாசலில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

கூறு கூறாக அவற்றைப் போட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். சுவையுடன் விலையும் குறைவாக இருப்பதால் அசைவ பிரியர்கள் இதை மிகவும் விரும்பி வாங்கிச் செல்வதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கூறிய நத்தை வியாபாரி ஒருவர், விவசாய பணிகள் அதிகம் இல்லாததால் நத்தைகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறோம். நத்தை கறி சுவையாக இருக்கும், அதுவும் நாங்கள் விலை மலிவாக கொடுப்பதால் அதிக அளவில் வாங்குகின்றனர். எனவே இவைகளை சேகரித்து வைக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு இதன் மூலமாக தான் பிழைப்பு ஓடுகிறது என கூறியுள்ளார்.

Previous articleபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி?
Next articleஇயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பிரபல வாரிசு நடிகை!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version