Home உலகம் “அழுக்கடைந்த இந்தியா” பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

“அழுக்கடைந்த இந்தியா” பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

கொரோனா தொற்றால் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ள அமெரிக்காவில் நவ.,3 ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் நடைபெறுகின்ற தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கு நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜோ பிடன் களம் காணுகிறார்.

இந்நிலையில் தேர்தலுக்கு முன் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்கும் வழக்கம் பின்பற்று வருகிறது.அதன்படி இன்று இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தில் கலந்து கொண்ட ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே கடும் விவாவதம் நடைபெற்றது

இருவரின் விவாதம் வருமாறு:-

ஜோ பிடன் : அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார் .மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை என்று விமர்சித்தார்.

மேலும் அவர் சீனாவில் டொனால்ட் டிரம்புக்கு ரகசிய வங்கிக்கணக்குகள் உள்ளதாக கூறினார். அதிபர் ட்ரம்ப் கூறுகையில் எங்களிடம் ‘டிரில்லியன் மரங்கள்’ திட்டம் இருக்கின்றது. தற்போது நமக்கு தேவை சுத்தமான காற்று,நீர் வேண்டும் என்று தெரிவித்த ட்ரம்ப் சீனாவைப் பாருங்கள் அது எவ்வளவு கேவலமாக உள்ளது. ரஷ்யாவைப் பாருங்கள். இந்தியாவைப் பாருங்கள் அவைகள் அசுத்தமானது. அங்கு காற்று அசுத்தமானது என்று குற்றம் சாட்டி விமர்சித்தார்.இந்நிலையில் அதிபரின் ட்ரம்பின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleTaman Negara Pahang dibuka semula hari ini
Next articleபணத்துக்காக 9 வயது சிறுவன் கடத்தி கொலை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version