Home உலகம் சீனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்கப்போவதில்லை: பிரேஸில் அதிபர்

சீனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்கப்போவதில்லை: பிரேஸில் அதிபர்

சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை பிரேஸில் வாங்கப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜெயிா் போல்சொனாரோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்கி மக்களுக்குப் பயன்படுத்தவிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அதிபர் இந்த தகவலை அளித்துள்ளார்.

சீனத்தின் சினோவாக் தடுப்பூசியை வாங்க வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்த கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்த அதிபர் ஜெயிா் போல்சொனாரோ, சீனத்தின் தடுப்பூசியை வாங்கப்போவதில்லை. அந்த தடுப்பூசிக்கான பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பொதுமக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவில் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனாவாக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4.6 கோடி கொரோனாவாக் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய சாவ்பாலோ மாகாண அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சீனத்தின் தடுப்பூசிகளை பிரேஸில் வாங்கப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் 3-ஆவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 53 லட்சம் போ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 1.55 லட்சம் போ பலியாகியுள்ளனா். பலி எண்ணிக்கையில் பிரேஸில் இரண்டாவது இடத்தில் உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version