Home மலேசியா மது விற்பனை மையங்களுக்கு நிபந்தனை அவசியம்

மது விற்பனை மையங்களுக்கு நிபந்தனை அவசியம்

கட்டாய நிபந்தனைகளில் ஒன்றாக ஓட்டுநர்கள் அல்லது ‘நியமிக்கப்பட்ட ஓட்டுநர்களைப் பணியமர்த்துவது போன்ற அம்சங்களில், மது விற்பனையாளர்கள் அல்லது பொழுதுபோக்கு மையங்களுக்கு அரசாங்கம்  நிபந்தனைகளைக் கட்டாயமாக்க மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (மிரோஸ்) பரிந்துரைத்துள்ளது.

ஆஸ்திரேலியா ஜப்பான் போன்ற பல வளரும் நாடுகள் ஏற்கனவே இந்த முறையை பின்பற்றியுள்ளன என்றும், மது போதையில் ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் சரிவை சந்தித்ததாகவும் மிரோஸ் தலைவர் டத்தோ சுரேத் சிங் தெரிவித்தார்.

ஓட்டுநர், பிற சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதுபானங்களை உட்கொண்ட பிறகு வாகனம் ஓட்ட பரிந்துரைக்கப்படவில்லை என்று அவர் இன்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மதுச்சாரம் , போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுவதற்கு கடுமையான அபராதங்கள் சாலை பயன்படுத்துபவர்களிடையே போக்குவரத்துச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கும், சாலை பயனர்கள் அனைவருக்கும் சாலைகள் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்வதற்கும் அதிக மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதற்கு காவல்துறையினர் தலைமை தாங்குகையில், மிரோஸ் சாலைப் போக்குவரத்துத் துறை பிற தொடர்புடைய துறைகள், ஏஜென்சிகளுடன் இணைந்து அதிகப் பரிந்துரை, விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவார் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

மடுச்சாரம்,  போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுவதற்கும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதற்கும் அரசாங்கம் ஏன் அதிக அபராதம் விதித்தது என்பதை மக்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்வது முக்கியமானது என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version