Home உலகம் பிரான்சில் தீவிரமாகும் கொரோனா- 2ஆவது அலை

பிரான்சில் தீவிரமாகும் கொரோனா- 2ஆவது அலை

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து முழு ஊரடங்கு, கடுமையான கடடுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரான்சில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 30ஆம் தேதி அமலுக்கு வந்த இந்த ஊரடங்கு ஒரு மாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் பிரான்சில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.

அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 14 லட்சத்து 66 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 416 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version