Home இந்தியா சம்பளம் கிடைக்காததால் ஆடு மேய்க்கும் கவுரவ பேராசிரியர்

சம்பளம் கிடைக்காததால் ஆடு மேய்க்கும் கவுரவ பேராசிரியர்

ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா புறநகர் பகுதியில் வசித்து வருபவர் வீரநாககவுடா. இவர் மஸ்கி டவுனில் உள்ள அரசு கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு தடை விதித்து உள்ளது. இதனால் வீரநாககவுடா வேலை பார்த்து வந்த அரசு கல்லூரியும் மூடப்பட்டு உள்ளது. இதனால் அவர் 7 மாதமாக வேலைக்கு செல்லவில்லை. அதே சமயம் அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சம்பளமும் வழங்கப்படவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த வீரநாககவுடா கஷ்டப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் குடும்ப கஷ்டத்தை போக்கும் வகையில் தற்போது 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து, வீரநாககவுடா குடும்பத்தை நடத்தி வருகிறார். இதுகுறித்து வீரநாககவுடா கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக எனக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த வேறு வழியின்றி ஆடுகளை மேய்த்து வருகிறேன். இதன்மூலம் தினமும் எனக்கு ரூ.200 வருமானம் கிடைக்கிறது. என்னை போல சம்பளம் கிடைக்காமல் ஏராளமான கவுரவ பேராசிரியர்கள் கஷ்டத்தில் உள்ளனர். எங்கள் கஷ்டத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Previous articleAnwar persoal unjuran KDNK 2021 tidak munasabah
Next articleசிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version