Home உலகம் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.. ஏனென்றால்?

ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.. ஏனென்றால்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தனது தோல்வியை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தேர்தல் மோசடியானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஃப்க்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் டுவிட்டரை மேற்கொள் காட்டி அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
‘அவர் (ஜோ பைடன்) வெற்றிபெற்றுள்ளார். ஏனென்றால் இந்த தேர்தல் மோசடியானது. வாக்கு எண்ணிக்கையில் வாக்கு கண்காணிப்பாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இடதுசாரி சித்தாந்தம் கொண்ட டொமினியன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நன்மதிப்பற்ற அந்நிறுவனத்தின் மோசமான உபகரணங்களால் டெக்சாசில் கூட தகுதிபெற முடியாது (நான் அதிகவாக்குகளில் வெற்றிபெற்ற இடம்). மேலும், போலி, அமைதியான ஊடகங்கள் மற்றும் இன்னும் சிலவற்றால் பைடன் வெற்றிபெற்றுள்ளார்.
என பதிவிட்டுள்ளார்.
Previous articleகார்த்தி அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு…
Next articleராஜி குழுமத்தின் ஏற்பாட்டில் டத்தோ ஶ்ரீ சரவணன் தலைமையில் தீபாவளி அன்பளிப்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version