Home உலகம் கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள தயங்கமாட்டேன்

கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள தயங்கமாட்டேன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று புதிய அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். அந்நாட்டில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் டிரம்ப் இருந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதில் நான் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டேன். தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு பற்றி மக்கள் தயங்குவதற்கு ஒரே காரணம் அதிபர் டொனால்டு டிரம்ப்.
அதிக தேவை உள்ள நபர்களுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பது அவசியம் என்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 11 நிறுவனங்களுள் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு கொண்ட தடுப்பூசிகளில் ஒன்றாக திகழும் மாடர்னா நிறுவனத்தின் மருந்து 95 சதவீதம் திறன் கொண்டது என்பது பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிஜர் தடுப்பு மருந்து 90 சதவீதம் திறன் வாய்ந்தது என கடந்த வாரம் இறுதியில் அறிவிப்பு வெளியானது.
இதுதொடர்பாக பேசிய பைடன், சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச தலைவர்களுடன் நாம் தெளிவான பாதையில் பயணிக்கிறோம். இந்த இரு தடுப்பு மருந்துகளையும் விஞ்ஞானிகள் சமூகம் கவனத்தில் கொண்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்துகள் தயாராகி விட்டது போல் தெரிகிறது. பயன்பாட்டிற்கும் தயாராக உள்ளது. இது தொடரும் பட்சத்தில் தடுப்பு மருந்துகளை நான் எடுத்துக் கொள்வேன். அதில் தயக்கம் காட்ட மாட்டேன்.
டாக்டர் பவுசி அல்லது மாடர்னா ஆகியவை தடுப்பு மருந்துகளை மக்களுக்கு அளிப்பதில் மிகுந்த பொறுப்புணர்வை கொண்டுள்ள சூழலில், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் அதன் திறன் ஆகியவை பற்றி சான்றளித்து விட்டால், தடுப்பு மருந்துகளை தயக்கமின்றி நானே எடுத்துக் கொள்வேன் என்று பைடன் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version