Home உலகம் ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது….

ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது….

ஈரானுடனான அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அளவை விட 12 மடங்கு அதிக அளவில் (202.8 கிலோவிற்கு பதிலாக 2.4 டன்கள்) ஈரான் தற்போது செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் இருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கடந்த 12 ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
இந்த தகவலையடுத்து, கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து ராணுவ தாக்குதல் நடத்த டிரம்ப் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
’நியூயார்க் டைம்ஸ்’ நாளிதல் வெளியிட்ட தகவலின், அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைகளின் தலைமை தளபதி பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீது ராணுவ ரீதியில் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா? என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் டிரம்ப் கேட்டறிந்துள்ளார்.
டிரம்பின் விருப்பத்தால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீதான தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனையை அடுத்து தனது முடிவில் இருந்து டிரம்ப் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளையும் டிரம்ப் தாமதப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version