Home உலகம் காதலித்து ஏமாற்றியதாக  வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!

காதலித்து ஏமாற்றியதாக  வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!

இளம்பெண் ஒருவர் தன்னை காதலிப்பது போல் நடித்து மோசடி செய்துவிட்டதாக கனடியரால் தொடரப்பட்ட வழக்கில், அவர் கற்பனை உலகில் சஞ்சரிப்பதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி. கனடாவில் வான்கூவரில் சட்டத்தில் பட்டம் பெற்றவர் டோங்டோங் ஹுவாங் (62). பெய்பெய்லி35) என்ற பெண் தன்னைக் காதலிப்பதாக எண்ணி ஒரு மில்லியன் டொலர் பணத்தையும் பரிசுகளையும் மழையாக பொழிந்துள்ளார் Huang.

ஆனால், Peipei வேறொருவரை திருமணம் செய்துகொள்ளவே, ஏமாற்றம் அடைந்த ஹுவாங், பெய்பெய் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் நம்பவைத்து மோசடி செய்துவிட்டதாக மீது வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால், இருவருக்கும் இடையிலான குறுஞ்செய்திகளை பார்வையிடும்போது, நான் உங்களுடன் எப்போதுமே இருக்கமாட்டேன் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளேன், எனக்கு, நீங்கள் ஒரு அண்ணன், ஒரு அப்பா அல்லது மூத்த அண்ணன் போல என்று தெரிவித்துள்ளார் பெய்பெய்.

புகைப்படங்களில் பெரும்பாலானவற்றில், பெய்பெய் கையில் நிச்சயதார்த்த மோதிரம் இருப்பதை தெளிவாகவே காண முடிகிறது. ஆனால், அதை தான் கவனிக்கவில்லை என்கிறார் ஹுவாங்.

தீவிர விசாரணைக்குப்பின் தீர்ப்பளித்த நீதிபதி, பெய்பெய் தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியதாக H தெரிவித்துள்ளது எதுவுமே உண்மையில்லை, அவர் வெறும் கற்பனையில், தன்னைவிட மிகவும் வயது குறைந்தவர்  மீதான ஆசையில், நடக்காததை நடந்ததாக நம்பிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், பெய்பெய் தன் நிலையை தெளிவாக அவரிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு  ஏமாற்றும் எண்ணம் எதுவும் இல்லை.

வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, பெய்பெய்  வீட்டில் பழுதுபார்ப்பதற்காக ஹுவாங் செலவிட்ட 2,280 டாலர்களை பெய்பெய் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று தீப்பாளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version