Home இந்தியா போனிலிலேயே விவாகரத்து கொடுத்த கணவன்

போனிலிலேயே விவாகரத்து கொடுத்த கணவன்

அழகு ஒப்பனை நிலையத்தில் வேலை பார்த்த மனைவியை அவரின் கணவர் போனிலேயே விவாகரத்து கொடுத்துள்ளார் .

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள அகமதுநகர் மாவட்டத்தில் 31வயதான ஒரு பெண் படிப்பு படித்து விட்டு துபாயில் அழகு நிலையமொன்றில் பணியாற்றினார்.

அவரின் கணவரோடு கடந்த வருடம் மும்பைக்கு திரும்பிய அவர் அங்குள்ள அகமது நகரில் மூன்று வயது மகளோடு வசித்து வந்தார்.

இந்நிலையில் அந்தப்ப் பெண் அங்குள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு போனார். அது அவரின் கணவருக்குப் பிடிக்கவில்லை அதனால் தன்னுடைய மனைவியிடம் இது பற்றி பல முறை எடுத்து சொன்னார்.

ஆனால், அவரின் மனைவியோ குடும்ப செலவுக்கும் தன்னுடைய செலவுக்கும் பணம் போதவில்லை என்பதால் அந்த அழகு நிலைய வேலையை தொடர்ந்தார் . இதனால் சந்தேகப்பட்ட அவரின் கணவர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்ய முடிவு செய்தார் .

அதனால் அந்த பெண்ணுக்கு நவம்பர் 20  ஆம் தேதி போன் செய்தார். அப்போது போனை எடுத்த அந்த பெண்ணிடம் இஸ்லாம் மத வழக்கப்படி மூன்று முறை தலாக் சொன்னார் .அப்படி தலாக் சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம் உறவை தொடர விரும்பவில்லையென்றும் ,மேலும் இனி வீட்டிற்குக்கு அவரை பார்க்க வரமாட்டேனென்றும் ,இனி அவரை விவாகரத்து செய்வதாகவும் கூறிவிட்டு போனை வைத்து விட்டார் .இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரின் கணவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார் .ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

அதனால் அந்த பெண் தனனுடைய கணவர் மீது போலீசில் புகாரளித்தார் .அதன் அடிப்படையில் அஹ்மத்நகரில் உள்ள பிங்கர் முகாம் காவல் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டம், 2019 இன் பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை அந்த கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சர்ச்சைக்குரிய இஸ்லாமிய நடைமுறைப்படி உடனடி விவாகரத்து செய்வதற்கு உச்சநீதிமன்றம் இதற்கு முன்பு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version