Home உலகம் கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்லத் தயாராகும் விமான நிலையங்கள்

கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்லத் தயாராகும் விமான நிலையங்கள்

கொரோனா தடுப்பு மருந்தினை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பிரிட்டன். பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விரைவில் அனுமதி அளிக்க உள்ளன.

ஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்துக்கு இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், உலகின் பல்வேறு மருந்து நிறுவனங்களும் மருந்தினை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் இறுதிகட்ட முயற்சியில் உள்ளன.

இந்த நிலையில், இந்த மருந்துகளை ஒவ்வொரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளன. இதற்கு ஏற்ப கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்வதற்கான கட்டமைப்பு உருவாக்குவது நாடுகளில் புதிய தேவையாக உருவாகியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தினை, மைனஸ் 70 டிகிரி செல்சியசில் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த மருந்தின் வீரியம் இருக்கும்.

மருந்து தயாரிக்கும் இடத்தில் இருந்து. ,கொண்டு செல்லும் இடம் வரை இந்த சீதோஷ்ண நிலையை பராமரிக்க வேண்டும். இதற்கு ஏற்ப, அதுபோன்ற கட்டடங்கள், வாகனங்கள், பெட்டிகளை தயாரிக்கும் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

சரக்கு விமானங்களில் அதுபோன்ற அறைகளை உருவாக்குவதுதான் பெரிய சவாலாக உள்ளது. விமான நிறுவனங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version