Home இந்தியா 2 கோடி கையெழுத்து- குடியரசு தலைவரைச் சந்திக்க செல்லும் ராகுல் காந்தி..

2 கோடி கையெழுத்து- குடியரசு தலைவரைச் சந்திக்க செல்லும் ராகுல் காந்தி..

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற குடியரசு தலைவர் மாளிகை தலையிட வலியுறுத்தி பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களை நாளை குடியரசு தலைவரை சந்தித்து ராகுல் காந்தி வழங்க உள்ளார்.

விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய குடியரசு தலைவா் தலையிடக்கோரி, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களிடம் சுமார் 2 கோடி கையொப்பங்களை பெற்றுள்ளது. இதனை ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் பிரதிநிதிகள் நாளை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து அவரிடம் வழங்க உள்ளனர்.

ராகுல் காந்தி

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்திய ஆரம்ப கட்டத்தலிருந்தே இந்த சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம், ஜனாதிபதியிடம் முறையீடுவதற்காக கையெழுத்துக்களை பெறும் ஒரு நாடு தழுவிய பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. 3 சட்டங்களை திரும்ப பெற குடியரசு தலைவர் மாளிகையின் தலையீட்டை வலியுறுத்தி இதுவரை சுமார் 2 கோடி பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் மோடி அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளித்துவ நண்பர்களின் கைகளில் அவர்களின் நலன்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

காங்கிரஸ்

முன்அறிவிப்பு , அமைதியான நோக்கம் இருந்தபோதிலும் கடந்த 28 நாட்களாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான இந்த 3 சட்டங்கள், இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள்,  விவசாய தொழிலாளர்களுக்கு மிகுந்த வேதனையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளன.

இவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த சட்டங்களுக்கு எதிராக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version