Home உலகம் 27 நாடுகளில் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஃபைசர் கொரோனா தடுப்பூசி

27 நாடுகளில் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஃபைசர் கொரோனா தடுப்பூசி

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 83 லட்சத்து 66 ஆயிரத்து 708 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 51 லட்சத்து 28 ஆயிரத்து 966 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 17 லட்சத்து 24 ஆயிரத்து 050 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,15,13,692 பேர்.

கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலைக்கு உலக நாடுகள் சென்று விட்டது. ரஷ்யாதான் முதன்முதலாக கொரோனா தடுப்பூசியைக் கண்டு பிடித்தது. ஆனால், மக்கள் நடைமுறைக்கு முதலில் வந்தது அமெரிக்காவின் ஃபைசர் கொரோனா தடுப்பூசிதான்.

பிரிட்டன் நாடுதான் முதன்முதலாக ஃபைசர் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த முன் வந்தது. அதன்பின் அமெரிக்காவிலும் ஃபைசர் கொரோனா தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனால், 50 மாகாணங்களிலும் கொரோனா தடுப்பூசி விநியோக முறை விரைவு படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்து விட்டது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளுக்கும் ஃபைசர் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version