Home இந்தியா சாதிப் பெயரை வாகனத்தில் பொறித்தால் தண்டனை

சாதிப் பெயரை வாகனத்தில் பொறித்தால் தண்டனை

லக்னோ:

ஸ்கூட்டர்கள்  நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தண்டனைக்குரியது என உ.பி., போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக யாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் என்றெல்லாம் சாதிப் பெயரை பெருமையாக வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றனர். எந்த கட்சி அதிகாரத்தில் உள்ளதோ அதற்கு ஏற்ப இந்த ஜாதிகளின் பெயர் பயன்படுத்தப்படும்.

பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது ‘ஜாதவ்’ ஸ்டிக்கர்களைக் கொண்ட வாகனங்கள் அதிகமாகத் தெரிந்தன.

சமாஜ்வாடி கட்சி ஆட்சியின்போது, வாகனங்களில் ‘யாதவ்’ என எழுதுவது ஒரு அடையாளமாக இருந்தது.

தற்போது யோகி ஆதித்யநாத் ஆட்சியில், சத்திரியா, தாக்கூர் அல்லது ராஜ்புத் போன்ற பெயர்கள் பொதுவாக காணப்படுவதாக கூறுகின்றனர்.

Previous articleதொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் – கமல்ஹாசன்
Next articleசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி – வைரலாகும் வீடியோ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version