Home இந்தியா தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம் –
தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளித்து விளையாடும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்த, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் அதிக நீரோட்டம், ராட்சத அலைகள் எழும் தனுஷ்கோடியில் கடற்கரையில் மனிதர்கள் நின்றால் கூட அலையினால் அரிக்கப்பட்டு, கடலுக்குள் இழுத்து செல்லும் தன்மை கொண்டதால், இப்பகுதியை ‘அரிச்சல்முனை கடற்கரை’ என பெயரிட்டனர்.
இக்கடலில் அவசர காலத்தில் உள்ளூர் மீனவர்களே நீந்தி செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். இந்நிலையில் ஊரடங்கினால் 9 மாதத்திற்கு பின் டிச.,23 இல் தனுஷ்கோடி தேசிய சாலை திறந்ததும், தினமும் ஏராளமான வாகனத்தில் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு நிலவும் ரம்மியான தட்பவெப்பம், அழகிய அலை, கடற்கரை கண்டதும் உற்சாகம் அடையும் சுற்றுலா பயணிகள், விபரீதம் தெரியாமல் கடலில் குளித்து விளையாடுகின்றனர்.
இங்கு நகராட்சி எச்சரிக்கை விளம்பரம், இரு கடல் போலீசாரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளிப்பதால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கூடுதல் போலீசாரை நியமித்து, சுற்றுலா பயணிகளை வெளியேற்ற போலீஸ் உத்தரவிட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version