Home உலகம் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த முகேஷ் அம்பானி..!

நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த முகேஷ் அம்பானி..!

 

மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்த ஆண்டில் ரூ.47,000 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது.
ஆனால் சீனாவின் வாட்டர் கிங் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன், ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானியை தோற்கடித்து ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக மாறிவிட்டார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலை செப்டம்பர் மாதம் ப்ளூம்பெர்க் பில்லியனர் வெளியிட்டது. இதில் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் ஜாங் ஷான்ஷன் 17 ஆவது இடத்தைப் பிடித்தார். முகேஷ் அம்பானிக்குப் பிறகு ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்று அழைக்கப்பட்டார்.

ஜாங் ஷான்ஷனின் சொத்து வளர்ந்து வரும் வேகம் அவருக்கு ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீது ஒரு பெரிய நெருக்கடியை கொடுக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது அது நடந்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜாங் ஷான்ஷன் சொத்து இந்த ஆண்டு 70.9 பில்லியன் டாலரிலிருந்து 77.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இதனால் அவர் உலகின் 11  ஆவது பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார்.

12- ஆவது இடத்தில் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார். ஷான்ஷன் பாட்டில் வாட்டர், கொரோனா தடுப்பூசி போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளார். ஜாங் ஷான்ஷன் இப்போது ஆசியாவின் பணக்காரர் மட்டுமல்ல, சீனாவின் பணக்காரரும் ஆவார்.

Previous article14 வயது சிறுவனின் வியாபாரத்திற்காக கைப்பேசி வழங்கப்பட்டது
Next articleகொரோனா பாதித்து மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை ஏற்க மறுக்கும் உறவினர்கள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version