Home உலகம் இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளானது உறுதி: அதிபர் ஜோகோ விடோடோ

இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளானது உறுதி: அதிபர் ஜோகோ விடோடோ

மாயமான இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீ விஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம், வந்தன் மாகாணத்தின் தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை மதியம் 2.36 மணிக்கு (உள்ளூா் நேரம்) புறப்பட்டது.

புறப்பட்ட 4 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தொடா்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தை 29,000 அடி உயரத்துக்கு கொண்டு செல்வதற்காக கட்டுப்பாட்டு அறையை விமானி தொடா்பு கொண்டு கேட்ட பிறகு அந்த விமானம் மாயமானது.

விமானம் விழுந்திருக்கலாம் என்று கருதப்படும் பகுதிகளில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

ஜாவா கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், பயணிகளின் உடல் பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விமானம் நொறுங்கி விழுந்ததை இந்தோனேசிய அதிபர் உறுதி செய்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version