Home இந்தியா 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் குரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொள்பவர்கள் இரண்டாவது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleவெறிச்சோடி இருக்கும் சில நீதிமன்றங்கள்
Next articleMalaysia terima 12.8 juta dos vaksin Pfizer akhir Februari – KKM

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version