Home உலகம் கழுதை பாலுக்கு திடீரென அதிகரித்த டிமாண்ட்’ : மவுசு உயரக் காரணம் இது தான்!

கழுதை பாலுக்கு திடீரென அதிகரித்த டிமாண்ட்’ : மவுசு உயரக் காரணம் இது தான்!

கொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி, கழுதைப்பாலில் இருப்பதாக நம்பப்படுவதால் அல்பேனியாவில் கழுதை பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

அல்பேனியா நாட்டில் சமீப காலமாக கழுதை பால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுதைப் பாலை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம். இதற்கு முக்கிய காரணம், கழுதை பாலில் இருக்கும் அதீத சத்துக்கள் தான். வைட்டமின்கள் அதிகமாக இருக்கும் கழுதைப் பால், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறதாம். அதனால், இது கொரோனா நோயில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஒரு சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.

தற்போது சத்தான உணவு பொருட்களை ஊன்று ஆரோக்கிய வாழ்வை தேடும் மக்கள், கழுதை பாலையும் சேர்த்துக் கொள்கிறார்களாம். இது கழுதை பாலுக்கான டிமாண்டை அதிகரிக்கச் செய்திருக்கும் நிலையில், அதன் விலை அதிகரித்திருப்பதால் கழுதை பண்ணை வைத்திருப்பவர்கள் குழியாக இருக்கிறார்களாம்.

வழக்கமாக அந்நாட்டில் அதீத சுமைகளை ஏற்றிச் செல்ல மலை பகுதிகளில் குதிரைகளை பயன்படுத்துவர். அப்போது, கழுதைகளை அடித்து கொடுமை படுத்துவதும் உண்டு. ஆனால், இந்த நிலை தற்போது தலைகீழாக மாறி கழுதைகளுக்கு ஏக போக மரியாதை கொடுக்கப்படுகிறதாம். மேலும் புல், தீவனம் என கழுதைகளுக்கு செழிப்பான உணவு வழங்கப்படுகிறதாம்.

Previous article157 முறை தோல்வி; 158ல் வெற்றி! இதுதான் விடாமுயற்சி!
Next articleMayat nelayan terapung di muara sungai

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version