Home இந்தியா தமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் -குடியரசு தின அணி வகுப்பில் சர்ச்சை!

தமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் -குடியரசு தின அணி வகுப்பில் சர்ச்சை!

குடியரசு தின அணி வகுப்பில் தமிழக வாகனத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் இருந் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 62ஆவது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார். அத்துடன் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்தாண்டு கொரோனா காரணமாக நிகழ்ச்சியை காண 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு பிறகு, மாநிலங்களின் சிறப்புகளை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகன ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் மாமல்புரம் கடற்கரை கோயில் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. பல்லவர்களின் பெருமையை கூறும் மாமல்புரம் கடற்கரை கோயில் அலங்கார ஊர்தியாக, பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாடலுடன் சென்றது.

இந்நிலையில் குடியரசு தின அணி வகுப்பில் தமிழகம் சார்பில் மாமல்புரம் கடற்கரை கோயில் வாகன அணிவகுப்பு நடைப்பெற்றது.அந்த வாகனத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் உள்ளது. தமிழகம் மட்டுமில்லாது மற்ற மாநிலங்களின் பெயர்களும் இந்தியிலேயே இருந்தது. ஏற்கனவே தமிழகத்தில் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என மத்தியில் ஆளும் பாஜக அரசு அராஜகம் செய்து வரும் நிலையில், மத்திய அரசு மறைமுகமாக இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க முயற்சிக்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் நேற்று வாக்காளர் பட்டியலில் கூட இந்தியில் இருந்தது. கடந்த 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளில் வாக்காளர் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. இதுகுறித்து திமுக சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version