Home உலகம் உடம்பில் மது சுரக்குதா.? விசித்திர நோயால் உருவாகும் மது.. ஆச்சர்ய சம்பவம்.!!

உடம்பில் மது சுரக்குதா.? விசித்திர நோயால் உருவாகும் மது.. ஆச்சர்ய சம்பவம்.!!

 பெண் ஒருவருக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் உலக அளவில் மதுவுக்காக பலரும் ஏங்கி கிடக்கும் நிலையில், மதுவை உடலிலேயே உற்பத்தி செய்யக்கூடிய அதிக சக்தியை பெண் ஒருவர் பெற்றுள்ளாராம்.

அமெரிக்காவில் வசிக்கும் சாரா என்ற 38 வயது பெண்ணுக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரக்கிறதாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவருக்கு ஆட்டோ பிரீவரி சிஸ்டம் எனப்படும் ஒரு அரிதான நோய் இருக்கிறது. இதனால் அவருடைய உடலில் தானாகவே மது சுரப்பதால் தானாகவே போதையாகி விடுவதாக கூறுகிறார். இந்த அரிய நோயால் அமெரிக்காவில் தலைப்பு செய்திகளிலே சாரா வந்துள்ளார்.இதனால் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார். இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் இவருக்கு மது பழக்கமே கிடையாது. அவர் மதுவை விரும்புவது கிடையாது. ஆனாலும் இவருடைய உடலில் எப்போதும் மது இருப்பதால் மதுபோதையில் இருப்பதாகவே மருத்துவர்கள் தவறாக நினைத்து கொள்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்த விசித்திர நோயால் தினசரி வாழ்க்கை பிரச்சினைகளையும் அவர் சந்தித்து வந்துள்ளார்.

எடுத்துக்காட்டாக வாகனம் ஓட்டும் போது மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாக காவல்துறையினர் பிடித்து விடுகின்றனர். இந்த எப்போது ஏற்பட்டதால் எதற்கு பிரச்சினை ஏற்படுகிறது தெரியாமல் இருந்துள்ளார். தற்போது தான் இதனுடைய பிரச்சினை தெரிந்துள்ளது.

இந்த விசித்திர நோய் பற்றி அவருக்கு தெரிய வந்துள்ளது. இதற்காக மருந்துகள் சாப்பிட்டு வருகிறார். இவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version