Home உலகம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு. மீண்டும் நிலவும் சூழல். முக்கிய தகவல்களுடன் எச்சரிக்கை.!

10 ஆண்டுகளுக்குப் பிறகு. மீண்டும் நிலவும் சூழல். முக்கிய தகவல்களுடன் எச்சரிக்கை.!

பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தளவு தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது.

பிரிட்டனில் தற்போது பனியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் கொட்டும் பனியில் சறுக்கி விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் ஸ்காட்லாந்து பேருந்து, ரயில்வே சேவைகள் ரத்து செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மோசமான வானிலை நிலவும். இதனால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை அலுவலக செய்தித்தொடர்பாளர் நிக்கோலா மெக்ஸி கூறியதாவது, இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து குளிர்ந்த காற்று கடப்பதால் சிறிது ஈரப்பதமாக இருக்கும். மேலும் செவ்வாய், புதன் கிழமைகளிலும் பணி தொடர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட அளவில் வெப்பநிலை 16.7C என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் கடந்த 10ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தளவு தட்ப வெப்பச்சூழல் நிலவுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version