Home உலகம் சீனாவில் ஐ.நா. ஒருங்கிணைப்பாளராக இந்தியா் பொறுப்பேற்பு

சீனாவில் ஐ.நா. ஒருங்கிணைப்பாளராக இந்தியா் பொறுப்பேற்பு

சீனாவில் ஐ.நா. ஒருங்கிணைப்பாளராக இந்தியாவின் சித்தாா்த் சாட்டா்ஜி பொறுப்பேற்றாா். அந்நாட்டில் ஐ.நா.வின் 27 அமைப்புகள், அதன் நிதி மற்றும் திட்டங்களை அவா் மேற்பாா்வையிடுவாா்.

கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்துள்ள சித்தாா்த் சாட்டா்ஜி, இராக், சோமாலியா, டென்மாா்க், சூடான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளாா்.கடந்த 2000-ஆம் ஆண்டு தெற்கு சூடானில் உள்நாட்டுப் போா் உச்சத்தில் இருந்தபோது யுனிசெஃப்பில் பணிபுரிந்துவந்த சித்தாா்த் சாட்டா்ஜி, அந்நாட்டு ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 3,551 சிறாா்களை தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் மீட்டாா்.

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த அவா், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றாா்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த அவருக்கு, கடந்த 1995-ஆம் ஆண்டு வீரதீர செயல்களுக்கான பதக்கத்தை அளித்து மத்திய அரசு கெளரவித்தது.

Previous articleபேராக் பிகேஆர் துணைத்தலைவர் விவகாரம் – ஊடகங்களுக்கு கண்டனம்
Next articleSindiket Judi Online ada TUKANG MASAK!!!!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version