Home உலகம் அதிர்ச்சிதரும் சீனாவின் மறுபக்கம்

அதிர்ச்சிதரும் சீனாவின் மறுபக்கம்

-பலத்தின் பின்னால் பலவீனம்
1970 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் பழங்கால ரயிலில் கிராமத்தில் விளையும் உணவுப் பொருட்கள், கோழி, பன்றி போன்ற விலங்குகளை ஏற்றிக்கொண்டு வருமானத்தை நோக்கி பயணிக்கும் அவலம் சீனாவில்  இன்னும் நடக்கிறது.

சீனா என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது அதிவேக ரயில்கள், உலகளவில் வியக்க வைக்கும் பல தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் என எண்ணிலடங்கா விஷயங்கள் தொடர்ந்து கொண்டே போகும்.

ஆனால், சீனாவில் வறுமையின் பிடியில் ஏராளமான மக்கள் இன்னும் வாழ்கின்றனர் என்ற தகவல் பலராலும் நம்ப முடிவதில்லை. மேலும், சீனாவை பூர்வீகமாகக் கொண்ட குடிமக்கள், அங்கு வசதியாக வாழ்ந்து வந்தாலும், உய்கூர் இனத்தைச் சார்ந்த முஸ்லிம் மக்கள், பழங்குடியின மக்கள் போன்றவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உணவு கூட கிடைக்காமல் அல்லாடும் சோகம் அரங்கேறி வருகிறது.

இவர்களை போன்றவர்கள் அங்கு ஆதிக்கம் செலுத்தி,  சீன குடிமக்களால் தாக்கப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அன்றாட தேவைகளுக்காக ரயில் பயணத்தை நம்பியிருக்கும் மக்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உள்ள செங் டூ (Chengdu) மலைக் கிராமமான சிச்சுவான் மாகாணத்தின் டேலியாங் கிராமத்தில், கடந்த 1970 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் பழங்கால ரயிலில் தங்களது கிராமத்தில் விளையும் உணவுப் பொருட்கள், கிராமத்தில் வளர்க்கப்படும் கோழி, பன்றி போன்ற விலங்குகளையும் ஏற்றிக்கொண்டு வருமானத்தை நோக்கி பயணிக்கும் அவலம் இன்றளவும் நடந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version