Home சினிமா சண்டைக் காட்சியில் கலக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அருள்

சண்டைக் காட்சியில் கலக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அருள்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கும் திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி புகைப்படங்கள் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர அருள் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-இல் தொடங்கியது. கடந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோனது.

இதனையடுத்து இந்தப் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.

இவர்கள் ஏற்கெனவே, விக்ரம், அஜீத் நடித்த ‘உல்லாசம்’, விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த ‘விசில்’ படங்களை இயக்கியவர்கள். இந்தப்படத்தில் கதாநாயகியாக வட இந்திய மாடல் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் இயக்கும் படம் பேண்டஸி கதையை கொண்டது என்று கூறப்படும் நிலையில், இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹீரோவாக நடிக்கும் அருள் சரவணனே படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் கடந்தாண்டு இப்படத்தில் இடம்பெறும் பிரம்மாண்ட டூயட் பாடலுக்கான செட் அமைக்கப்பட்டு அந்தப் புகைப்படங்கள் வெளியானது. இப்போது இப்படத்தில் அருள் சரவணன் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version