Home Uncategorized முடிவு நம் கைகளில்

முடிவு நம் கைகளில்

இடைநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலை 6ஆம் படிவங்களிலும் தமிழ் – தமிழ் இலக்கிணம் போதிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. பற்றாக்குறை நிலவுகிறது என்ற கூப்பாடு இன்றல்ல, நேற்றல்ல… பல காலமாகவே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இடைநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலை 6ஆம் படிவங்களிலும் இப்பாடங்களைப் போதிப்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர் என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகக் கூறுகிறது.

நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட 800 முதல் 900 பயிற்சி பெற்ற இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. அதற்கான இளங்கலைப் பட்டப்படிப்பு கல்வி உயகாரச் ங்ம்பளமும் வழங்கப் போவதில்லை என்று மலேசியக் கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதனால், பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி உப்சி பல்கலைக்கழகத்தில் அரங்ாங்க உபகாரச் சம்பளத்துடன் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு நின்று போனது.

இந்நிலையானது மலாயா பல்கலைக்கழகத்தில் மொழியியல் அல்லது இந்திய ஆய்வியல் துறையில் படித்து, ஆசிரியர் பட்டயம் பெற்று இடைநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வேலைக்கு விண்ணப்பம் ஙெ்ய்திருக்கும் அல்லது ஙெ்ய்யவிருக்கும் பலருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்.

கல்வி அமைச்சின் இம்முடிவால் 200க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படலாம். மேலும் உப்சி பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பிரிவிலும் பயிலும் மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகலாம்.

இவ்வேளையில் இன்னொரு சிக்கலையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டி இருக்கிறது. தமிழ் இலக்கியம் போதிப்பதற்கு தனியே ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்பதுதான் அந்தச் சிக்கல்.

தமிழாசிரியர்களே இலக்கியமும் போதித்து வந்தனர் – வருகின்றனர். தமிழ்ப் பாடத்திலேயே இலக்கியம் உண்டு. ஆனால் இடைநிலைப் பள்ளி முதல்வர்கள் அதனை ஏற்க மறுத்து தமிழ் இலக்கியம் எடுப்பதற்கு அனுமதிப்பதும் இல்லை.

இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை பெரும்பாலான முதல்வர்கள் பொருட்படுத்துவதே இல்லை. சில இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவதற்கும் அனுமதிப்பது இல்லை.

ஒவ்வோர் ஆண்டும் பள்ளி நிர்வாகம் – மாணவர் – பெற்றோர் என்று ஒரு முத்தரப்பு போராட்டமே நடத்தப்பட வேண்டியுள்ளது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுப்பதில்லை என்ற நிலைதான்.

இப்போராட்டத்தில் ங்லிப்படைந்து போகும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தை எடுப்பதையே தவிர்த்து விடுகின்றனர். இது காலங்காலமாக நடந்து வரும் ஒரு சிக்கல்.

இவ்விவகாரத்தில் பரந்த அனுபவமும் ஆய்வுத் திறனும் நிறைந்த டாக்டர் குமரன் வேலு ராமங்ாமியிடம் கருத்துக் கேட்டோம். இதோ அவரது விளக்கம்:
ஆசிரியருக்கான தேவை மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.

தமிழ்ப்பள்ளியில் இருந்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டு வருகிறது. மாணவர் எண்ணிக்கையப் பொறுத்தே ஆசிரியருக்கான தேவையும் அதிகரிக்கிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலர் இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழிப் பாடத்தை எடுப்பதில்லை. முதலாம் படிவத்தில் தமிழ்மொழியைப் படிக்க வாய்ப்பு கிட்டாத மாணவர்கள் தொடர்ந்து அந்தப் பாடத்தை எடுப்பதற்கு விருப்பம் காட்டுவதில்லை.

இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மாணவர்கள் தமிழ்ப்பாடம் எடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். பள்ளியின் முதல்வர்களை தமிழ்மொழி சார்ந்த இயக்கங்கள் அணுகி உதவி கோரவேண்டும்.

தாய்மொழியின் தேவையைப் பற்றி பெற்றோரிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்மொழிப் பாடம் படித்துக் கொடுக்க ஆசிரியர் உள்ள இடைநிலைப் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டும். அறிவியல் துறை மாணவர் என்றாலும் தனியே கூடுதல் வகுப்பு எடுத்தாவது தமிழை ஒரு பாடமாக எடுக்க பிள்ளைகளை வற்புறுத்த வேண்டும்.

எஸ்பிஎம் (குக–) தேர்வில் தமிழ்மொழிப் பாடம் எடுப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கு தமிழ்ப்பள்ளியில் பதியும் மாணவர் எண்ணிக்கை குறைவதும் ஒரு காரணம். இலக்கியப்பாடம் எடுப்போர் எண்ணிக்கையும் அதிகரித்தால் நல்லது.
கடந்த 2016ஆம் ஆண்டு 14,800 தமிழ் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றனர்.

அந்த எண்ணிக்கை 2019 இல் 13,500 ஆகக் குறைந்து விட்டது.
2016 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் தமிம்மொழியை எடுத்தோர் எண்ணிக்கை ஏறக்குறைய 9,000 பேர். தமிழ் இலக்கியம் எடுத்தோர் எண்ணிக்கை ஏறக்குறைய 3,000 பேர். ஏறத்தாழ 5,000 பேர் தமிழ்மொழியை எஸ்பிஎம் தேர்வில் எடுக்கவில்லை அல்லது எடுக்க வாய்ப்புக் கிட்டவில்லை என்றே பார்க்க வேண்டும். இவர்கள் தமிழ் எடுத்திருந்தால் படித்துக் கொடுக்க ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும்.
தமிழ் ஆசிரியரின் தேவை அதிகரித்தால் கல்வியமைச்சு உபகாரச் சம்பளத்தோடு பயிற்சியை வழங்கும். பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்களின் தேவையும் அதிகரிக்கும். எல்லாம் ஒரு சங்கிலித் தொடர்புதான்.

தாய்மொழிப்பற்று, மொழி உணர்வு மொழிக்கான வேலை வாய்ப்பையும் அதிகரிக்க உதவும். இதற்குத்தான் நம் இனத்திற்கு மொழிப்பற்று தேவை என்று தலைப்பாடாக அடித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு டாக்டர் குமரன்வேலு தமது கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

– பி.ஆர். ராஜன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version